உள்ளூர் செய்திகள்

பெண்ணை பின்தொடர்ந்த வாலிபருக்கு அடி உதை

கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.10 பேர் மீது வழக்கு.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் .கருக்கல்வாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (40). இவரை அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்த ரவி, நவீன், நல்லதம்பி, ஐயம்மாள், குமார், ராஜமாணிக்கம், காசி, செல்வி, வள்ளி, மோகன் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT