உள்ளூர் செய்திகள்

கச்சிராயப்பாளையம் அருகே பள்ளி பஸ் மோதி 4 வயது சிறுமி பலி

சஞ்சனா ஒரு தனியார் பள்ளி படித்து வந்தார்.பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி டேம் காணங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மனைவி மலர். இவர்களுக்கு சத்தியா (வயது 10) சஞ்சனா( வயது 4 )என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இருவரும் கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி படித்து வந்தனர்.இதில் சஞ்சனா எல்.கே.ஜி.படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது பள்ளியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன சஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.