12 அடி நீள மலைப்பாம்பை படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

முக்கூடல் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆலங்குளம் செல்லும் சாலையில் அணைந்தநாடார்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு அந்த பள்ளி அருகில் மெயின்ரோட்டின் குறுக்காக 12 அடி நீள மலைபாம்பு சென்றது

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ளது இடைகால் கிராமம். இங்கு இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் அணைந்தநாடார்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு அந்த பள்ளி அருகில் மெயின்ரோட்டின் குறுக்காக 12 அடி நீள மலைபாம்பு சென்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் அம்பை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

SCROLL FOR NEXT