சம்பவம் நடந்த வண்டிகருப்பணசாமி கோவில் 
உள்ளூர் செய்திகள்

பூசாரியை மிரட்டிய 7 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் அருகே கோவில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

வடமதுரை:

திண்டுக்கல்&திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வண்டிக்கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று கோவில் பூசாரி தனம் பூஜை செய்துகொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன், கருப்பையா, காளியப்பன், அய்யன்அம்பலம், சின்னச்சாமி, பெருமாள் ஆகியோர் கிடாவெட்டும் நேர்த்திக்கடனை செய்ய முயன்றதாக தெரிகிறது. மேலும் பூசாரி அங்குள்ள கேமராவை சரிசெய்து கொண்டிருந்த போது அவரை தடுத்து நிறுத்தினர்.

மேலும் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் மாலதியிடம் பூசாரி தகவல் தெரிவித்தார். செயல் அலுவலர் புகாரின் பேரில் வடமதுரை போலீசார் மேற்படி 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT