ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.
இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்ததாக 7 பேர் கொண்ட கும்பலை ஆத்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.
இதில் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஜீவா, ஆனந்த் ,அன்புமணி, மாரிமுத்து, ஹரிஹரன், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சந்தோஷ், ஆகியோர் அடங்குவர். அவர்களிடம் ஆத்தூர் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.