உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கள்ளியங்காடு வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் சூதாடி கொண்டு இருந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55), வாணிப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (47), சந்திரன் (38), டி.என்.பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (53), ராஜன் (39), ஆறுமுகம் (56) என தெரிய வந்தது.

அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.