தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 628 ஆக உள்ளது.
இதுவரை 35 லட்சத்து 22 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகம் முழுவதும் 5,407 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.