(கோப்பு படம்) 
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் இன்று 525 பேருக்கு கொரோனா

சென்னையில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.இன்று 596 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

மாலை மலர்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 596 ஆக உள்ளது. இதுவரை 35 லட்சத்து 23 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. தமிழகம் முழுவதும் 5,268 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது