கோப்பு புகைப்படம் 
உள்ளூர் செய்திகள்

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி

எம்.ஐ.டி கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாலை மலர்

தாம்பரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 4,862 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து இன்று 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்ட 80 மாணவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.