5 வயது சிறுமி பலி 
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே சுடு தண்ணீரில் விழுந்த 5 வயது சிறுமி பரிதாப பலி

கடலூர் அருகே சுடு தண்ணீரில் விழுந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

கடலூர்:

கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி வாணிபம் பகுதியை சேர்ந்தவர் ராமன். (வயது 31). இவரது மகள் யாசினி (5). சம்பவத்தன்று ராமன் வீட்டு முன்பு விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது அங்கு யாசினி விளையாடிக் கொண்டிருந்தார். அடுப்பில் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டிருந்த போது திடீரென்று தவறி யாசினி சுடு தண்ணீர் பாத்திரத்தில் விழுந்தார். உடலில் சுடு நீர் கொட்டி யாஷினி அலறி கத்தியதை பார்த்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி யாசினி பரிதாபமாக உயிரிழந்தார்‌ இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.