உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே பணம் வைத்து சீட்டாடிய 5 பேர் கைது

வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது. அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரியை அடுத்த நெடுகுளா பகுதியில் இளைஞர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது. இதையடுத்து பணம் வை்து சீட்டு விளையாடிய ரவிக்குமார், ஷினாத், ரமேஷ், அபிஷேக், ஜீவா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT