தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை பரசுராமன் அக்ரஹாரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேற்கு போலீசாருக்குதகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் சீட்டு விளையா–டியவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் 5 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சசிகுமார் (வயது 40), ராஜேந்திரன் (41), பரிசுத்தம் நகரை சேர்ந்த சுப்ரமணியன் (58), விக்னேஷ் (27), ராகவேந்திரன் (40) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையா டியதும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், ராகவேந்திரன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.