உள்ளூர் செய்திகள்

கோவையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

கோவை,

கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. . அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த கேரள மாநிலம் சித்தூரை சேர்ந்த சூர்யா (வயது 25), பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் அகிலன் (20), புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் இமான் ஷா (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

ரத்தினபுரி போலீசார் சாஸ்திரி நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற சங்கனூரை சேர்ந்த ஷாஜூ (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஷாஜூவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

ஆலாந்துறை போலீசார் பூலுவப்பட்டி மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற பெயிண்டர் பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.