உள்ளூர் செய்திகள்

பணகுடி அருகே வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு

சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.

மாலை மலர்

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் மதகனேரி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் மணி. இவரது மனைவி சுபாஷினி (வயது 34). இவரது தாயும் அவருடன் தங்கி உள்ளார்.

நகை திருட்டு

சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்தார். அவர் கதவை பூட்டாமல் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.

இந்நிலையில் சுபாஷினி வீடு திரும்பினார். அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் சுபாஷினி அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.

கைரேகை நிபுணர்கள்

இதுகுறித்து அவர் பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.