விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் (வயது 26), அய்யப்பன் (32), மீனாட்சி (42), கலையரசி (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சாராயம், மது பானங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.