உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபரை வெட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது

எபனேசர் எட்டையபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரிடம் சாலையில் நின்ற ஒரு வாலிபர் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் எபனேசரை பிடித்துக் கொண்டு அவரின் தலையில் கத்தியால் வெட்டினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ் புரத்தை சேர்ந்தவர் எபனே சர். ( வயது 24 ). இவர் எட்டையபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரிடம் சாலையில் நின்ற ஒரு வாலிபர் 'லிப்ட்' கேட்டு ஏறினார்.

சிறிது தூரம் சென்ற நிலையில் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி எபனேசரை வாகனத்தை நிறுத்த சொல்லி உள்ளார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் எபனேசரை பிடித்துக் கொண்டு அவரின் தலையில் கத்தியால் வெட்டினர்.

பின்னர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி கங்கா ராஜேஸ்வரி காலனி சேர்ந்த மகேஷ் குமார் (24),வடக்கு சங்கரபேரியை சேர்ந்த அஜித்குமார்( 23 ), குறிஞ்சி நகர் சேர்ந்த அருண்குமார் (25 )மற்றும் ஈஸ்வரன் (42) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.