உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வெள்ளக்கல்-ஜருகு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வெள்ளக்கல்-ஜருகு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வெள்ளக்கல்-ஜருகு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு முட்புதரில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

இதில் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (30), தண்டுகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (34), ஜருகு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (25), ஈசல்பட்டியைச் சேர்ந்த நந்தகோபால் (32) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடினர் என்பது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT