சென்னை மாவட்ட வலுதூக்குதல் போட்டி 
உள்ளூர் செய்திகள்

300 பேர் பங்கேற்பு- சென்னை மாவட்ட வலுதூக்குதல் போட்டி

சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்கம் மற்றும் பிட்கிட்ஸ் இணைந்து சென்னை மாவட்ட வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. அடையாறில் இந்தப்போட்டி நடந்தது. சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் ஹெர்குலிக்ஸ் ஜிம் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஆக்சிஜென் ஜிம் 2-வது இடத்தையும், மெர்வின் ஜிம் 3-வது இடத்தையும் பிடித்தன.

SCROLL FOR NEXT