மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதி நார்த்தாமலை தளபதி மகன் கோகுல் (வயது18), ஜீவானந்தம் மகன் கோகுல் (17). இவர்கள் இருவரும் கோட்டூர் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்கள்.
நரசிங்கம்பேட்டையை சேர்ந்த திருமாறன் (16). மன்னார்குடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த மாணவர்கள் மூவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி வந்தனர்.
பஸ்ஸை டிரைவர் தவக்குமார் (45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் மன்னார்குடி தேரடி அருகே வரும்போது ஒரு லாரி முந்தி சென்ற போது பஸ் மீது உரசியதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.