உள்ளூர் செய்திகள்

நெய்வேலியில் ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் நகை பறிப்பு

நெய்வேலியில் ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது. நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

நெய்வேலி பிளாக் 29 சேர்ந்தவர் வெங்கடேசன். (வயது 40). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஓட்டலில் மூடி விட்டு வெளியில் படுத்து தூங்கினார்‌. பின்னர் எழுந்து பார்க்கும் போது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT