கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் குடிபழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்றுவலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகினார். இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் விஷம் குடித்து மயங்கினார்.

தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டி பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்த வர் சின்னகைலாசம் மனைவி கூடம்மாள் (65). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். தனது மகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றவர் கைலாசபட்டியில் உள்ள தோப்பில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.