கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

தேனி அருகே 2 மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

தேனி அருகே 2 மாணவிகள் உள்பட 3 பேர் மாயமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சவுந்தர்யா (வயது 19). உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு  சென்ற சவுந்தர்யா மாயமானார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தேனி எடமால் தெரு பகுதியைச் சேர்ந்த நீதிராஜன் மகள் செண்பகஸ்ரீ (17). இவர் தேனியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் அங்காள ஈஸ்வரி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

க.புதுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 41). இவர் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற ரஞ்சித்குமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது மனைவி பிரேமா உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.