சென்னை:
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மயிலாப்பூர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சாப்பிட சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகாத முறையில் பேசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.