கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தேனி சிறையிலிருந்து 3 கைதிகள் நெல்லைக்கு மாற்றம்

தேனி சிறையிலிருந்து 3 கைதிகள் நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

தேனி:

மதுரையைச் சேர்ந்த ரவுடி பிள்ளையார் கணேசன். இவரது கூட்டாளிகளான மதுரையைச் சேர்ந்த வேதாளம் என்ற வெற்றிவேல் (வயது 25). பிரபு என்ற மாட்டு பிரபு (26), தவமணி (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இங்கு தங்களுக்கு போதிய வசதிகள் இல்லை எனவும் கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் 3 பேரும் சிறையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருநெல்வேலி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.