கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தேனி அருகே ஜோதிடரிடம் கத்தி முனையில் 25 பவுன் நகை பறிப்பு

ஜோதிடரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட முயன்றனர். போலீசார் ஒருவரை பிடித்தனர். தப்பிஓடிய நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ள குண்டல்நாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரவிமுத்து(51). இவர் ஜோதிடராக உள்ளார். மேலும் சொந்தமாக விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று தனது ேதாட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அமர்ந்திருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவரது தோட்டத்திற்கு வந்தனர். திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரவிமுத்து அணிந்திருந்த 25 பவுன் தங்க சங்கிலியை பறித்து க்கொண்டு ஓட முயன்றனர்.

இதனைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரவிமுத்து கூச்சலிட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். மற்ற 2 பேரும் தப்பித்துவிடவே ஒருவரை மட்டும் பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை பிடித்து தப்பிஓடிய நபர்கள் யார் என விசாரித்து வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT