உடன்குடி:
தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் ஹமீதா ஷபானா நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், உடன்குடி பேரூராட்சி 17-வது வார்டு புதுமனை பள்ளிவாசல் தெரு சமத்துவபுரத்தில் அரசு இடத்தில் சுமார் 20 வருடங்களாக குடியிருக்கும் 25 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.