உள்ளூர் செய்திகள்

போத்தனூர் அருகே டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்து தப்பி ஓட முயன்றனர்.

குனியமுத்தூர்,

கோவை வெள்ளலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 47). கால் டாக்சி டிரைவர். சம்பவத்தன்று இவர் மூலக்கடை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் ராஜூவை தடுத்து நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி பணம் கொடுக்கும்படி மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ராஜூவின் பாக்கெட்டில் இருந்த ரூ. 3 ஆயிரம் பணத்தை பறித்து தப்பி ஓட முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் மதன்குமார் என்ற மில்கி (25), காமராஜர்புரத்தை சேர்ந்த மூவேந்திரன் (25) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டி ல் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT