தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் க.புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி சுமித்ரா(24). சம்பவத்தன்று கருப்பசாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த சுமித்ரா மாயமாகி இருந்தார்.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் ேதடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி மேட்டுவளவை சேர்ந்தவர் காமாட்சி மகள் ரேவதி(21). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.