தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அனுமன் தீர்த்தம் பகுதியை ேசர்ந்தவர் 17 வயது பெண். அதேபோல் பிள்ளையார் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது ெபண்.
இவர்கள் இருவரும் தருமபுரி மாவட்டத்தில், பட்டுகோணாம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று விடுதியில் இருந்து வெளியே சென்ற இவர்கள் நீண்ட நேரமாகியும் வரவில்லை. விடுதியில் வேலை செய்பவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.