கூடலூர்:
கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் முத்து (வயது37). இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராாஜேந்திரன் மனைவி மயில் (57). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.