உள்ளூர் செய்திகள்

பாளையில் ஜே.சி.பி. எந்திரத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

சுரேஷ்குமார் தனக்கு சொந்தமான ஜே.சி.பி.யை அப்பகுதியில் நிறுத்தி இருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

நெல்லை:

பெருமாள்புரம் அருகே உள்ள ஆயன்குளம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஜே.சி.பி.யை அப்பகுதியில் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்த போது, ஜே.சி.பி.யின் பேட்டரி திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் பேட்டரியை திருடியது ரெட்டி யார்பட்டி யை சேர்ந்த ஜெகன் (30) மற்றும் மகி ழ்ச்சி நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் (30) என்பது தெரியவந்தது. இதைத் தொ டர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT