உள்ளூர் செய்திகள்

நெல்லை டவுனில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

நெல்லை டவுன் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது37). இவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று டவுன் போலீசில் புகார் செய்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

நெல்லை:

நெல்லை டவுன் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜான்சன்

( வயது37). இவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தினார். இதில் தூத்துக்குடி மாவட்டம் கயத் தாரை சேர்ந்த மாரி மதன் (21), டவுன் அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்த மாத வன் (20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசர் கைது செய்தனர்.