உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம், மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம், மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் தலைமையில் போலீசார் மோட்டாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் விஜயகாந்த் (வயது 32) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று சங்கரா புரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீ சார் பூட்டை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த சிவா (33) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT