உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

அரசு பள்ளி அருகில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேத்திற்கு இடமான வகையில் ஆண் மற்றும் பெண் நின்று கொண்டிருந்தனர்.போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரனாக பதிலளித்தால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் முத்துக்குமார்மற்றும் போலீசார் ரோந்து செ ன்றனர். அப்போது பாக்கி யம் நகர் அரசு பள்ளி அருகில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தே த்திற்கு இடமான வகையில் ஆண் மற்றும் பெண் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்த பொன்னையன் மனைவி பகவதி (வயது 48) , மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மதிவாணன் ( 32) என்பதும், 2 பேரும் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.