மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 126 மனுக்கள் தள்ளுபடி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த 126 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் போட்டியிடுவதற்கு 338 பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில் 330 மனுக்கள் ஏற்கப்பட்டு 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட 37&வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செல்வராஜ் என்பவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் 4 மனுக்கள், தி.மு.க. சார்பில் 2 மனுக்கள், சுயேட்சைகள் என மொத்தம் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் மனுத்தாக்கல் செய்திருந்த வேட் பாளர்களில் 2249 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

மாவட்டத்தில் 23  பேரூராட்சிகளில் 1825 வேட்புமனுக்கள் ஏற்கப் பட்டது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நத்தத்தில் 125 பேர் மனுத்தாக்கல் செய்தி ருந்தனர். குறைந்தபட்சமாக பண்ணைக்காட்டில் 50 பேர் மனுத்தாக்கல் செய் திருந்தனர்.

நிலக்கோட்டையில் 114, ஆயக்குடி 113, வத்தலக்குண்டு 98, சின்னாளப்பட்டி 97, அய்யலூர் 95, தாடிக்கொம்பு 88, ஸ்ரீராமபுரம் 86, நெய்க்காரப்பட்டி 84, அகரம் 82, வடமதுரை 80, சேவுகம்பட்டி மற்றும் அம்மையநாயக்கனூர் 79, பாளையம் 77, சித்தையன்கோட்டை மற்றும் கன்னிவாடி தலா 76, பால சமுத்திரம் மற்றும் எரியோடு 72, அய்யம்பாளையம் 68, வேடசந்தூர் 62, பட்டி வீரன்பட்டி 55, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.