வாக்கு எண்ணிக்கை 
உள்ளூர் செய்திகள்

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 11 மணி முன்னிலை நிலவரம் - 753 இடங்களில் திமுக வெற்றி

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 180 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

மாலை மலர்

சென்னை:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

காலை 11 மணி நிலவரப்படி நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 753 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

180 இடங்களில் அதிமுகவும், 162 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.