புனிதநீர் நிறைந்த மகா கடத்திற்கு ஆராதனை செய்யப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது.சங்காபிஷேகம் செய்த புனிதநீர் பிரசாதம் அருந்தியும் சாமி அருள் பெற்றனர்.

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.

முன்னதாக கோவில் பிரசங்க மண்டபத்தில் புனித நீர் மகா கலசம் மற்றும் புனித நீர் நிறைந்த சங்குகளை நான்கு மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு யாக வேள்வியும் வேதபாராயணமும் ஆராதனையும் நடந்தது.

நேற்று பிரதோஷமும் சோம வாரமும் இணைந்த நாளில் நந்தியெம்பெருமானுக்கும் ஐயாறப்பருக்கும் பிரதோஷம் மற்றும் சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், சங்காபிஷேகம் செய்த புனித நீர் பிரசாதம் அருந்தியும் சுவாமி அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT