மாணவர் சேர்க்கை பணி நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

விலையில்லா புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகூர் அரசு தேசிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், பள்ளி துணைத் தலைவர் அமுதா ஆறுமுகம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேரணில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

முன்னதாக நடைபெற்ற விலையில்லா புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் இவற்றை சிறப்பு விருந்தினர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.

தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

உதவி தலைமை ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சித்ரா மேகலா, தேவி, தையல்நாயகி, செந்தில், பாலா சத்துணவு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.