திருவள்ளூர்:
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் எஸ்பிபி உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார்.