சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடைபெறும் தீவிர போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த எஞ்சிய 6 ஐ.பி.எல். ஆட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்டங்கள் புனேயில் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்தது.
ஐ.பி.எல். போட்டி சென்னையில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விளையாடுவதை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். கடைசி 2015-ம் ஆண்டு தான் சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். ஆட்டம் நடந்தது.
மிகுந்த ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு ஐ.பி.எல் போட்டி சென்னையில் நடக்காது என்று அறிவிக்கப்பட்டதால் மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ள னர்.
இதுகுறித்து சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் கூறும்போது, காவிரி விவகாரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன். அதற்காக ஐ.பி.எல். போட்டியை அரசு இடம் மாற்றம் செய்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதை பார்க்க ஆவலுடன் இருந்தேன். இந்த போட்டி தற்போது நடக்காததால் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் கூறும்போது, “சென்னையில் உள்ள அனைத்து மக்களும் காவிரிக்கு ஆதரவானார்கள் தான். ஆனால் விளையாட்டுடன் அரசியலை கலக்கக்கூடாது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஐ.பி.எல். ஆட்டத்தை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து வெகுவாக ரசித்தேன்.