கோப்பு படம் 
செய்திகள்

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு

ஒரத்தநாடு அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 35). இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் 18 வயதில் ஒரு மகள் உள்ளனர். மகள் வாய் பேசமுடியாமல், நடக்க இயலாத மாற்றுத்திறனாளி பெண்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நிர்மலா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் குழந்தைகளை தனது சகோதரர் சரவணன், அவரது மனைவி விமலா பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அதேபகுதியை சேர்ந்த ரவி மகன் கர்ணன்(21) என்பவர் வீட்டிற்குள் புகுந்து அவரை கற்பழித்து விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி விமலா பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கர்ணனை தேடி வருகின்றனர்.

வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.