திருச்சி:
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ராஜேந்திரன் என்ற மாற்றுத்திறனாளி மற்றும் அவரது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை பெறுவதற்கான பரிசோதனை செய்ய வந்துள்ளனர்.
அப்போது பணியில் இருந்த மருத்துவர் இலவச பஸ் பாஸ்களால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என கூறி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 25 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அரசு மருத்துவமனை டீன் அனிதா, சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.