செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணியில் சண்டிமலுக்கு இடமில்லை

இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் டெஸ்ட் கேப்டன் சண்டிமலுக்கு இடம் கிடைக்கவில்லை.

மாலை மலர்

காயத்தால் அணியில் இடம்பெறாமல் இருந்து ஆல்ரவுண்டர் அசேலா குணரத்னே, தொடக்க பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குணரத்னே கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு எதிராக காலே டெஸ்டில் விளையாடும்போது காயமடைந்தார். அதன்பின் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.


குணரத்னே

இலங்கை அணியின் கேப்டனாக உபுல் தரங்கா நியமிக்கப்பட்டிருந்தார். தென்ஆப்பிரக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒயிட்வாஷ் மூலம் இழந்ததால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு திசாரா பேரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி கடந்த 25 ஒருநாள் போட்டிகளல் 21-ல் தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத மேத்யூஸ் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார்.


குணதிலகா

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-