கோப்பு படம் 
செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்த 2 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பட்டம் நடத்தினர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

கடந்த 10 வருடங்களாக மகளிர் குழுக்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரியும் தூய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா வைரஸ் தொற்று மூலம் உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்த 2 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பட்டம் நடத்தினர்.

வத்தலக்குண்டு பேரூராட்சி முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஒன்றிய தலைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் ராணி தலைமைதாங்கினார். இதில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகேசன், ஆட்டோ தொழிற்சங்க முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப் பாட்டத்தில் கோரி க்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.