செய்திகள்

திண்டுக்கல் அருகே மனைவி கண்முன்ணே கணவன் விபத்தில் பலி

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் மனைவி கண்முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே என்.பாறைப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது55). பண்ணைப்பட்டி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சகோதரி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பண்ணைப்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழந்தது.

இதில் முருகன் மற்றும் அவரது மனைவி படுகாய மடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு சம்பவம்

திண்டுக்கல் அருகே வீரசின்னம்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் பொதியன்(37). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று சாணார்பட்டியில் இருந்து வீரசின்னம்பட்டிக்கு ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பொதியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த டிரைவர் செந்தில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அருள்சேவியர் விசாரணை நடத்தி வருகிறார்.