செய்திகள்

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும்: தினகரன் ஆதரவு வக்கீல் பேட்டி

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும் என்று தினகரன் ஆதரவாளரும், வாணியம்பாடியைச் சேர்ந்த வக்கீலுமான எம்.ஜே.பாலசுப்பிரமணி கூறியுள்ளார்.

மாலை மலர்

பெங்களூரு:

பெங்களூருவில் இன்று காலை தினகரன் ஆதரவாளரும், வாணியம்பாடியைச் சேர்ந்த வக்கீலுமான எம்.ஜே.பாலசுப்பிரமணி கூறியதாவது:-

அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பதை ஏற்க முடியாது. அவர் ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும். தொண்டர்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள். கட்டாயம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகள் என்று கூறப்படும் அவரது அண்ணன் மகன் தீபன், மகள் தீபா ஆகியோரது ரத்தத்தையும், அம்ருதா ரத்தத்தையும் எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.