செய்திகள்

விழுப்புரம்-சிவகங்கை-அரியலூர் அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: தினகரன் அறிவிப்பு

விழுப்புரம்-சிவகங்கை-அரியலூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்து உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கே.ஜி.பி.ஞானமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில்நாதன் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக கே.கே.உமாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தாமரை ராஜேந்திரன் நீக்கப்பட்டு முத்தையன் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட் டுள்ளது.