செய்திகள்

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் கட்சி பதிவிகளிருந்து நீக்கம்: தினகரன் அறிவிப்பு

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை கட்சி பதிவிகளிருந்து நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களை டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்.

இன்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை கட்சி பதவியில் இருந்து நீக்கினார்.

எஸ்.பி.வேலுமணி கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக உள்ளார்.

இவர்களை நீக்கி விட்டு கோவை புறநகர் மாவட்ட செயலாளராக கே.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ரத்தினவேல் எம்.பி. விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நீக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT