செய்திகள்

கெட்ட வார்த்தையால் மோடி மீது ‘மீம் தாக்குதல்’ நடத்தியது நானல்ல: திக்விஜய் சிங் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்து இணையதளத்தில் நைய்யாண்டி செய்ததாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருவதாக சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினரும் எதிர் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான திக்விஜய் சிங் பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்து டுவிட்டரில் நைய்யாண்டி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக, இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த திக்விஜய் சிங், எனது வார்த்தைகள் மிகவும் எளிமையாக இருக்கும். மோடியை நான் விமர்சிக்க விரும்பி இருந்தால் மக்களை முட்டாள்களாக்கும் கலையில் அவர் கைதேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருப்பேன்.