பெங்களூரு:
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.
இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் பெங்களூரு மாநகர குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் ரவி, மைசூர் சிறை சூப்பிரண்டு ஆனந்த் ரெட்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை இந்த குழுவினர் டி.ஜி.பி. சத்தியநாராயணராவிடம் விசாரணை நடத்தவில்லை. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவர் இன்று மாலையுடன் ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில் அவர் வேறு ஒரு புகாரில் சிக்கி உள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மரவந்தி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை கூடுதலாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதாக புகார் கூறப்படடு உள்ளது.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி உடுப்பி கலெக்டருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் இன்று மாலை அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.